/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மின்வாரிய ஒப்பந்த ஊழியருக்கு நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டம்
/
மின்வாரிய ஒப்பந்த ஊழியருக்கு நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டம்
மின்வாரிய ஒப்பந்த ஊழியருக்கு நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டம்
மின்வாரிய ஒப்பந்த ஊழியருக்கு நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 15, 2025 11:20 PM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே மின் விபத்தில் உயிரிழந்த ஒப்பந்த ஊழியரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரி சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது.
திருக்கோவிலுார் அடுத்த கரடி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் மகன் பிரவீன்குமார், 27; கடந்த 5 ஆண்டுகளாக மின் வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த 13ம் தேதி ஜி.அரியூரில் பணியின் பொழுது, மின் ஊழியர்களின் அலட்சியத்தால் பிரவீன்குமார் பலியானதாகவும், அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர், பாதிக்கப்பட்ட குடும்பத்தாருடன் திருக்கோவிலுார் மின்வாரிய அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.
இதில் சி.ஐ.டி.யு., தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.