/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வள்ளலார் மன்றத்தில் புரட்டாசி மாத பூச விழா
/
வள்ளலார் மன்றத்தில் புரட்டாசி மாத பூச விழா
ADDED : அக் 15, 2025 11:20 PM
சங்கராபுரம்: சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் புரட்டாசி மாத பூச விழா நடந்தது.
மன்ற பொருளாளர் முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் ராதாகிருஷ்ணன், சந்திரசேகரன், குசேலன் முன்னிலை வகித்தனர். ரோட்டரி முன்னாள் துணை ஆளுனர் வெங்கடேசன் வரவேற்றார். அனைத்து வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் மூர்த்தி, ஆசிரியை இளையாப்பிள்ளை ஆகியோர் அகவல் படித்து உலக நலனுக்காக பிரார்த்தனை செய்தனர்.
ஓய்வூதியர் சங்க தணிக்கையாளர் சீனிவாசன், தமிழ் படைப்பாளர் சங்க செயலாளர் சக்திவேல், அரசம்பட்டு திருவள்ளுவர் சங்க தலைவர் சவுந்தரராஜன், அரிமா மாவட்ட தலைவர் ராஜா உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். விழா அமைப்பாளர் செல்வி வெங்டேசன் நன்றி கூறினார்.