UPDATED : அக் 16, 2026 12:05 AM
ADDED : அக் 16, 2026 12:02 AM

அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த பங்காரம் லட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் வணிகவியல் மற்றும் வணிக மேலாண்மைத்துறை சார்பில் டிஜிட்டல் தலைமுறைக்கான நிதி விழிப்புணர்வு தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு கல்லுாரி தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார்.
செயலாளர் முருகப்பன், இயக்குநர் சரவணன், பொருளாளர் சாந்தி, ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். இளங்கலை வணிகவியல் மாணவர் மணிகண்டன் வரவேற்றார்.
துறை தலைவர் வெங்க டேசன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.
கருத்தரங்கில் கள்ளக்குறிச்சி சிட்டி யூனியன் வங்கி மேலாளர் ஆனந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.
கல்லுாரி முதல்வர் பழனியம்மாள் வாழ்த்திப் பேசினார்.
பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
