/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தேர்வு பயத்தை போக்க விழிப்புணர்வு பயிற்சி
/
தேர்வு பயத்தை போக்க விழிப்புணர்வு பயிற்சி
ADDED : ஏப் 26, 2025 05:33 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி, ஏ.கே.டி.,பள்ளியில், மாவட்ட பள்ளிக்கல்வி துறை சார்பில், மாணவர்களிடையே தேர்வு பயம் மற்றும் மன அழுத்தத்தை போக்க, 'பரிக்ஷா பர்வ்' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சி.இ.ஓ., கார்த்திகா தலைமை தாங்கினார். ஜி.அரியூர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர் செந்தில்ராஜ், விழிப்புணர்வு பயிற்சி அளித்தார்.
இதில், தேர்வு என்பது ஒரு அழுத்தமான விஷயம் கிடையாது. மாறாக ஒரு கொண்டாட்டம் என்று மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ளும் போது மன அழுத்தத்தை குறைக்க தேவையான வழிகள், உத்திகள், மனநல ஆலோசனை வழங்குவது குறித்து எடுத்துரைக்கப்பட்டன.
அதேபோல கல்வி நிறுவனங்கள், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் தேர்வை ஒரு கொண்டாட்டமாக பார்க்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பள்ளி தலைமையாசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

