/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மணம்பூண்டி மற்றும் கோமுகி பாலம் ஓரம் கொட்டப்படும் கழிவுகளால் துர்நாற்றம்

ADDED : ஆக 06, 2025 12:46 AM

திருக்கோவிலுார்; மணம்பூண்டி உயர்மட்ட பாலம் ஓரத்தில் கொட்டப்படும் கழிவுகளால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
திருக்கோவிலுார், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள உயர்மட்ட பாலத்தின் மணம்பூண்டி பகுதியில் சாலையின் இருபக்கமும் புதர்கள் மண்டி கிடக்கிறது. இதனால் பாலத்தின் வலபுறம் அழுகிய காய்கறிகள், குப்பைகளை சமூகவிரோதிகள் கொட்டிச் செல்கின்றனர். இதனால் ரகோத்தமர் மூல பிருந்தாவனத்தில் கடும் துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் முகம் சுளித்து செல்கின்றனர். பாலத்தின் இருபக்கம் உள்ள புதர்களை அகற்றி, குப்பைகளை கொட்டாதபடி நெடுஞ்சாலைத்துறை தடுப்புகள் அமைக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் சாலையில் உள்ள கோமுகி ஆற்றுப்பாலம் ஓரத்தில் மூட்டை மூட்டையாக குப்பையை குவித்து வைத்துள்ளனர். குறிப்பாக, ஏராளமான இறைச்சி கழிவுகள் மூட்டை கட்டி வீசுவதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. அப்பகுதியில் சுற்றித்திரியும் நாய், பன்றிகள் இறைச்சி கழிவுகளை கிளறுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, கோமுகி ஆற்றுப்பாலத்தை ஒட்டியவாறு வீசப்பட்டுள்ள குப்பை மூட்டைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.