/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாணவர்களின் கல்வி சேவையாக திகழும் பங்காரம் லஷ்மி கல்லுாரி
/
மாணவர்களின் கல்வி சேவையாக திகழும் பங்காரம் லஷ்மி கல்லுாரி
மாணவர்களின் கல்வி சேவையாக திகழும் பங்காரம் லஷ்மி கல்லுாரி
மாணவர்களின் கல்வி சேவையாக திகழும் பங்காரம் லஷ்மி கல்லுாரி
ADDED : அக் 01, 2025 12:53 AM

பங்காரம் லஷ்மி கல்வி நிறுவனங்கள் தலைவர் மணிவண்ணன், செயலாளர் முருகப்பன் ஆகியோர் கூறியதாவது; கள்ளக்குறிச்சி அடுத்த பங்காரம் லஷ்மி ஹைகிரிவாஸ் கல்வி அறக்கட்டளை சாதனைகள்படைப்போம்,
சமுதாயத்தை உயர்த்துவோம் என்ற தாராக மந்திரத்தை அடிப்படையாக கொண்டு துவங்கப்பட்டது. உண்மை, உழைப்பு, தியாகம் ஆகியவற்றைகொண்டு நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் கூடிய நிர்வாக திறமையால் கடந்த 11 ஆண்டுகளாக கல்வி சேவை புரிந்து வருகிறது.
மாணவர்கள் விரும்பும், வேலை வாய்ப்பிற்கு ஏற்ற பாடப் பிரிவுகளைகொண்டு அண்ணாமலை பல்கலைக் கழக இணைவு பெற்று 9 இளநிலை பட்ட படிப்புகள், 5 முதுகலை பட்ட படிப்புகளுடன் செயல்படுகிறது. அதேபோல் சிறந்த ஆசிரியர்களை கொண்டு அனைத்து வசதிகளுடன் கூடிய ஸ்ரீலஷ்மி கல்வியில் கல்லுாரி இயங்குகிறது. இங்கு பல்கலை பாடத்திட்டத்துடன், பல்வேறு துறை சார்ந்த நடைமுறை கல்வியும் அளிக்கப்படுகிறது.
பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள் கொண்டு தேசிய அளவிலான கருத்தரங்குகள், மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு வேலை வாய்ப்பிற்கு உதவும் சிறப்பு பயிற்கள் அளிக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் ரத்த தான முகாம் நடத்துவதுடன், உயிர் காக்கும் நேரங்களில் மாணவர்கள் ரத்த தானம் செய்கின்றனர்.
இங்கு பயிலும் மாணவர்கள் பல்கலை தேர்வில் முதலிடம் பெற்று சாதிப்பதுடன், பல்கலை தரவரிசை பட்டியலிலும் சாதனை படைத்து வருகின்றனர். விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் பொருட்டு பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கு பயிற்சி அளிப்பதுடன், திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.
மாணவர்களுக்கு நாட்டுபற்று வளர்க்கும் வகையில் என்.சி.சி., என்.எஸ்.எஸ்., செயல்பட்டு வருகிறது.
இங்கு படிக்கும் மாணவர்களுக்கு இலவச பஸ் வசதிகள் செய்யப்படுகிறது. ஸ்ரீ லஷ்மி கல்வி நிறுவனம் தன்னாட்சி நிறுவனமாக உருவெடுப்பதை லட்சியமாக கொண்டு செயல்படுத்தி வருகிறோம் என கூறினர்.