/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்வராயன்மலை நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை
/
கல்வராயன்மலை நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை
ADDED : ஆக 12, 2025 02:56 AM
கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலை பெரியார் நீர்வீழ்ச்சியில், ஒரு வாரத்திற்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையில் பெரியார், கவியம், மேகம், சிறுகலுார் உட்பட பல்வேறு நீர்வீழ்ச்சிகள் உள்ளன. இதில், பெரியார் நீர்வீழ்ச்சி சாலையோரத்திலேயே உள்ளது.
இதனால், அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் குளித்து மகிழ்வர். நேற்று முன்தினம் பெய்த கனமழையால் பெரியார் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதாலும், மரக்கட்டை உள்ளிட்ட பொருட்கள், மண் ஆகியவை தண்ணீரில் கலந்து வருதாலும் ஒரு வார காலத்திற்கு பெரியார் நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

