/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பாரதிதாசன் பிறந்தநாள் விழா கள்ளக்குறிச்சி
/
பாரதிதாசன் பிறந்தநாள் விழா கள்ளக்குறிச்சி
ADDED : மே 01, 2025 05:42 AM

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம், தமிழ் சங்கம் சார்பில் பாவேந்தர் பாரதிதாசனின், 135வது பிறந்தநாள் விழா நடந்தது.
தமிழ்ச்சங்க தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சிறப்பு தலைவர் ராமலிங்கம், பொருளாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர். செயலாளர் ராசகோபால் வரவேற்றார். ரிஷிவந்தியம் பஸ்நிறுத்தம் அருகே வைக்கப்பட்ட பாரதிதாசன் உருவப்படத்திற்கு, பேராசிரியர் ஸ்ரீதர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். தியாகதுருகம் பாரதியார் தமிழ் சங்க தலைவர் துரைமுருகன் பேசினார். நிகழ்ச்சியில், தியாகதுருகம் கவி கம்பன் கழக தலைவர் நல்லாபிள்ளை, நிர்வாகிகள் பிரியதர்ஷினி, ரம்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.