ADDED : அக் 24, 2025 11:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியத்தில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கு பூமி பூஜை நடந்தது.
ரிஷிவந்தியம் ஆதிதிராவிடர் பகுதியில் 13.36 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டுமானப் பணிக்கான பூமிபூஜை நடந்தது. வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பணியை துவக்கி வைத்தார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் பெருமாள், சேர்மன் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், ஊராட்சி தலைவர் வினிதா மகேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

