இந்திய பகுதிகளை இணைத்து ரூபாய் நோட்டு; வம்பிழுக்கும் நேபாளம்
இந்திய பகுதிகளை இணைத்து ரூபாய் நோட்டு; வம்பிழுக்கும் நேபாளம்
ADDED : நவ 27, 2025 07:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காத்மாண்டு: இந்தியாவின் எல்லைப் பகுதிகளான உத்தரகாண்டில் உள்ள கலாபானி, லிபுலேக் உள்ளிட்ட பகுதிகளை இணைத்து நேபாளம் வெளியிட்ட 100 ரூபாய் நோட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா- நேபாளம் எல்லையில் லிபுலேக், லிம்பியாதுரா, கலாபானி ஆகிய பகுதிகள் உள்ளன. இவை உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளன. இந்த பகுதியை நேபாளம் உரிமை கொண்டாடி வருகிறது. இதனை இந்தியா நிராகரித்துவிட்டது. இருப்பினும், இந்த பகுதிகளை உள்ளடக்கி, வரைபடம், ரூபாய் நோட்டுகளை நேபாளம் வெளியிட்டு வருகிறது.
புதிதாக வெளியிட்டுள்ள 100 ரூபாய் நோட்டிலும் இந்த பகுதிகள் இடம்பெற்றுள்ளன. அந்நாட்டு ரிசர்வ் வங்கி கவர்னர் கையெழுத்துடன் இந்த நோட்டுகள் வெளியாகியுள்ளன. இதனால், இரு நாடுகளுக்கு இடையே உறவு மோசமாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

