/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருப்பதி தேவஸ்தான கோவில் கல்யாண மண்டபம் கட்டுமான பணிக்கு பூமி பூஜை
/
திருப்பதி தேவஸ்தான கோவில் கல்யாண மண்டபம் கட்டுமான பணிக்கு பூமி பூஜை
திருப்பதி தேவஸ்தான கோவில் கல்யாண மண்டபம் கட்டுமான பணிக்கு பூமி பூஜை
திருப்பதி தேவஸ்தான கோவில் கல்யாண மண்டபம் கட்டுமான பணிக்கு பூமி பூஜை
ADDED : ஜன 28, 2024 06:13 AM

உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டையில் திருப்பதி தேவஸ்தான கோவில் கல்யாண மண்டபம் கட்டுமான பணியினை ஐ.ஜே.கே., நிறுவனர் ்துவக்கி வைத்தார்.
உளுந்தூர்பேட்டையில் திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில் கல்யாண மண்டபம் கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினரும், அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கினார்.
இதில் கல்யாண மண்டபம் கட்டுமான பணியை மேற்கொண்டுள்ள இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் ் பாரிவேந்தர் எம்.பி., பூமி பூஜையுடன் பணிகளை துவக்கி வைத்தார். அர்ச்சகர் மற்றும் பணியாளர் விடுதி கட்டுமான பணியை மேற்கொண்டுள்ள இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன், விருந்தினர் மாளிகை கட்டுமான பணி மேற்கொண்டுள்ள மருதம்குரூப்ஸ் அனந்தகிருஷ்ணன், ஆஞ்சநேயர் சிலை பணி மேற்கொண்டுள்ள திருகுமரன், கருடர் சிலை பணி மேற்கொண்டுள்ள ஜெயராமன், முகப்பு வளைவு பணி மேற்கொண்டுள்ள சுப்பிரமணியன் ஆகியோர் பூமி பூஜையுடன் பணிகளை துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளி முதல்வர் யத்தீஸ்வரி ஆத்மவிகாச ப்ரியாஅம்பா, ஐ.ஜே.கே., மாநில பொதுச் செயலாளர் ஜெயசீலன், மாநில துணை செயலாளர் சத்தியநாதன், மாநில முதன்மை அமைப்பு செயலாளர் வெங்கடேசன், அ.தி.மு.க.. முன்னாள் எம்.எல்.ஏ., அழகுவேல்பாபு, ஒன்றிய செயலாளர்கள் மணிராஜ், சந்திரன், ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், தி.மு.க., வர்த்தகரணி மாவட்ட அமைப்பாளர் செல்லையா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.