/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட பூமி பூஜை
/
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட பூமி பூஜை
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட பூமி பூஜை
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட பூமி பூஜை
ADDED : மார் 15, 2024 12:16 AM

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணை ஆற்றில் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்ட பூமி பூஜை நடந்தது.
கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை சாலை நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. இதில், தென்பெண்ணை ஆற்றின் கோரிக்கை மேம்பாலம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
நிகழ்ச்சிக்கு கோட்ட பொறியாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். உதவி கோட்ட பொறியாளர் சிவசுப்ரமணியம், உதவி செயற்பொறியாளர்கள் சர்மா, மணிவண்ணன், சங்கராபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் பரமசிவம் வரவேற்றார்.
வசந்தம்கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பங்கேற்று பூமி பூஜையை துவக்கி வைத்தார். மாவட்ட கவுன்சிலர் அஸ்வினி செந்தில்குமார், ஒன்றிய துணை சேர்மன் அஞ்சலை கோவிந்தராஜ், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் விஜய் ஆனந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.