ADDED : ஆக 22, 2026 03:28 AM
அ நிறம் | அளவு
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டி நடந்தது.
விமான ஓடு பாதையில் மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டி நடந்தது. போட்டியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்திகா தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மோகன் செல்வம் முன்னிலை வகித்தார். 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான போட்டி நடந்தன.
உளுந்துார்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குநர் சங்கர், உடற்கல்வி ஆசிரியர்கள் சிவஈஸ்வரன், ரமேஷ் சீசர், செந்தில்குமார், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
