ADDED : ஆக 22, 2026 03:28 AM

அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கல்லைத் தமிழ்ச் சங்கம் சார்பில் திருக்குறள் ஒலிப்பேழை இயக்க துவக்க விழா நடந்தது.
விழாவிற்கு டாக்டர் ஆர்.கே.எஸ். கல்லுாரி தாளாளர் டாக்டர் குமார் தலைமை தாங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட கம்பன் கழக ஒருங்கிணைப்பாளர் ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தார். சீர்காழி சிவசிதம்பரத்தின் 133 ராகங்களில் பாடப் பெற்றுப் பதிவு செய்யப்பட்ட திருக்குறள் ஒலிப்பேழையை முதன்முதலாக இயக்கி வைத்து, கல்லைத் தமிழ்ச் சங்க செயலாளர் மதிவாணன் திருக்குறளின் பெருமைகளை விரிவாக எடுத்துக் கூறினார்.
நிகழ்ச்சியில் கல்லைத் தமிழ்ச் சங்க இணைச் செயலாளர் மகேந்திரன், ஆசிரியர் சிவப்பிரகாசம், சண்முகம், கவிஞர் சீனு முரளி உட்படபலர் பங்கேற்றனர். செவிலியர் உமா நன்றி கூறினார்.
