ADDED : பிப் 16, 2025 05:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை சாலையின் குறுக்கே சென்ற மூதாட்டி பைக் மோதி இறந்தார்.
உளுந்துார்பேட்டை தாலுகா ஏ. குமாரமங்கலத்தில் வசித்தவர் குப்பு,80; இவர், நேற்று தனது வீட்டின் அருகில் சாலையின் குறுக்கே நடந்து சென்றார். அப்போது, சென்னை, குமாரப்பபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ்,50; என்பவர் ஓட்டி வந்த பைக், மூதாட்டி மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.