நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே பைக் திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
சங்கராபுரம் அடுத்த ரங்கப்பனுாரை சேர்ந்த சீனுவாசன் மகன் ரமேஷ், 35; இவர் நேற்று முன்தினம் மூக்கனுாரில் உள்ள விவசாய நிலத்திற்கு பைக்கில் சென்றார். அங்கு பைக்கை நிறுத்தி விட்டு நிலத்திற்கு சென்று திரும்பி வந்தபோது, பைக் திருடப்பட்டு இருந்தது. இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.