/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாலையில் பைக்குகள் 'பார்க்கிங்' கல்லையில் போக்குவரத்து நெரிசல்
/
சாலையில் பைக்குகள் 'பார்க்கிங்' கல்லையில் போக்குவரத்து நெரிசல்
சாலையில் பைக்குகள் 'பார்க்கிங்' கல்லையில் போக்குவரத்து நெரிசல்
சாலையில் பைக்குகள் 'பார்க்கிங்' கல்லையில் போக்குவரத்து நெரிசல்
ADDED : டிச 23, 2024 11:12 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் அரசு மற்றும் தனியார் வங்கிகள், விடுதி மற்றும் பல்வேறு கடைகள் உள்ளது.
மேலும், கச்சேரி சாலை வழியாக போலீஸ் ஸ்டேஷன், தாலுகா அலுவலகம், நீதிமன்றம் மற்றும் பஸ் டெப்போக்களுக்கு செல்ல வேண்டும். இதனால் கச்சேரி சாலை வழியாக பொதுமக்கள் பலர் தங்களது வாகனங்களில் செல்கின்றனர்.
தற்போது, சங்கராபுரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி வரை சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில் கச்சேரி சாலையில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருவதால், அங்குள்ள கடைகளுக்கு முன்னாள் வாகனங்கள் நிறுத்த முடியவில்லை. இதனால் இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.நீண்ட நேரமாக பைக்குகள் நிறுத்தப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே, கச்சேரி சாலையில் நிறுத்தப்படும் பைக்குகளை கண்காணித்து, முறைப்படுத்திட போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.