UPDATED : அக் 07, 2026 12:05 AM
ADDED : அக் 07, 2026 12:02 AM
திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் அருகே இரு தரப்பினர் மோதலில் 13 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், அரகண்டநல்லுார் அடுத்த டி.தேவனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம் மகன் கார்த்தி, 38; இவர், நேற்று முன்தினம் தனது மனைவியுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மெடிக்கல் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த வேலாயுதம், 60; என்பவரிடம், ஓரமாக நிற்கும்படி கூறியுள்ளார். இதனால், வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த, வேலாயுதம் தரப்பினர், கார்த்தியை தாக்கினர். இதனால் இரு தரப்பினராக தாக்கிக் கொண்டனர்.
இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில், கார்த்தி, வேலாயுதம் உட்பட 13 பேர் மீது, அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசா ரித்து வருகின்றனர்.
