சுய உதவிக்குழு, வட்டார கூட்டமைப்பு தணிக்கை பணி: விண்ணப்பம் வரவேற்பு
சுய உதவிக்குழு, வட்டார கூட்டமைப்பு தணிக்கை பணி: விண்ணப்பம் வரவேற்பு
UPDATED : அக் 06, 2026 10:42 PM
ADDED : அக் 06, 2026 08:44 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுய உதவிக்குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகளின் தணிக்கை பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
கலெக்டர் பத்மஜா செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுய உதவிக்குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகளின் தணிக்கை பணிகளுக்கு விருப்பம் உள்ள தணிக்கையாளர்கள் மற்றும் தணிக்கை நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணிகளுக்கு அரசுத் துறைகள், அரசுத் திட்டங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் சுய உதவிக்குழுக்கள், வாழ்வாதார திட்ட நடவடிக்கைகளில் நல்ல முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேவையான தகுதிகள், விதிமுறைகள் பற்றிய கூடுதல் விபரங்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு இணைய தளம் (https://kallakurichi.nic.in) மூலம் அறியலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணை இயக்குநர், திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், புதிய கலெக்டர் அலுவலகம், 6ம் தளம், அறை எண். 613, வீரசோழபுரம், கள்ளக்குறிச்சி 606 202 என்ற முகவரிக்கு வரும் 10ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
