ADDED : பிப் 18, 2025 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார் ; அய்யனார் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருக்கோவிலுார் அடுத்த கரடி கிராமத்தில், பெண்ணையாற்றின் அருகில் மடுகரை அய்யனார் கோவில் உள்ளது. நேற்று காலை பூசாரியான வைத்தியநாதனின் மனைவி பழனியம்மாள் கோவிலை திறக்க வந்தார்.
அப்போது, கோவில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தகவலறிந்த திருக்கோவிலுார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

