/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை ஆலோசனைக் கூட்டம்
/
பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை ஆலோசனைக் கூட்டம்
ADDED : ஜன 02, 2024 11:43 PM

கள்ளக்குறிச்சி : மூங்கில்துறைபட்டில் பா.ஜ., சார்பில் ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது.
மூங்கில்துறைப்பட்டில் நடந்த பா.ஜ., ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சிக்கு மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்டத் தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். மகளிர் அணி மாவட்ட துணைத் தலைவர் சந்திரலேகா முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில்உறுப்பினர்கள் சேர்க்கை துரிதப்படுத்தல், மகளிர் அணியை வலுப்படுத்திட ் ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் மாற்றுக்கட்சி பெண்கள் பா.ஜ.,வில் இணைந்தனர். சங்கராபுரம் வடக்கு ஒன்றிய விவசாயி அணித் தலைவர் ராஜா, ஏழுமலை, சங்கராபுரம் நலத்திட்ட பிரிவு ஒன்றியத் தலைவர் ராமன், ஒன்றிய நிர்வாகிகள் அருணகிரி, தட்சிணாமூர்த்தி, சரவணன் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் சௌந்தர்யா, உஷா, ராஜேஸ்வரி, தாட்சாயணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மகளிர் அணி சாந்தி நன்றி கூறினார்.