
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: அரகண்டநல்லுாரில் பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மார்க்கெட் கமிட்டி முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, முகையூர் மேற்கு மண்டல தலைவர் செல்வ குமார் தலைமை தாங்கினார். விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் கலிவரதன் கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.
பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மார்க்கெட் கமிட்டியை உடனடியாக சீரமைத்து பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு நியாயமான நிவாரண தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.