
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி:
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு கள்ளக்குறிச்சி பா.ஜ., சார்பில் தீபம் ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நான்கு முனை சந்திப்பில் மாவட்ட தலைவர் பாலசுந்தரம் தலைமையில் கட்சியினர் தீபம் ஏற்றி, கருப்பு பேட்ஜ் அணிந்து, மவுன அஞ்சலி செலுத்தினர்.
மாவட்ட பொது செயலாளர்கள் தியாகராஜன், ராஜேஷ், நிர்வாகிகள் மகேந்திரன், துரை, குணசேகர், பழனிசாமி, வில்சன், கண்ணன், ராமச்சந்திரன், சத்தியமூர்த்தி, தர்முசிங், சத்யா, வேல்முருகன், ஐயப்பன், சிவசக்தி, குழந்தைவேல், முத்து, ஒன்றிய தலைவர்கள் மணிகண்டன், வெங்கடேசன், முத்தையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.