/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பா.ஜ., சார்பில் விடுதலை தின கருத்தரங்கு
/
பா.ஜ., சார்பில் விடுதலை தின கருத்தரங்கு
ADDED : செப் 05, 2025 09:49 PM

கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் பா.ஜ., ஓ.பி.சி. மற்றும் எஸ்.சி. அணி சார்பில் விடுதலை தின கருத்தரங்கம் நடந்தது.
பா.ஜ., மாவட்ட தலைவர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர் ரவி, துணை தலைவர்கள் மணிமாறன், கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணவேணி, வாசுகி, செந்தில்குமார், மாநில செயலாளர் செல்வநாயகம் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொது செயலாளர் முருகன் வரவேற்றார்.
ஓ.பி.சி. அணி தேசிய செயற்குழு உறுப்பினர் கார்வேந்தன், ஓ.பி.சி. மாநில தலைவர் திருநாவுக்கரசு, எஸ்.சி., அணி மாநில தலைவர் சம்பத்ராஜ் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். மாநில துணை தலைவர் வெங்கடேசன் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மாநில செயலாளர் பாண்டியராஜ், மாவட்ட செயலாளர்கள் அய்யப்பன், கோவிந்தன், சதீஷ்குமார், பெரியசாமி, சிவகுரு, மாவட்ட நிர்வாகிகள் சிவசக்தி, சவுந்தரராஜன், முருகன், செல்வராஜ், ஜெயவர்மா, குழந்தைவேல், ராஜேஷ், வேல்முருகன், செல்வகணபதி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். நகர தலைவர் சத்யா நன்றி கூறினார்.