/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தொகுதி திட்ட மேலாளர் பணி கலெக்டர் அழைப்பு
/
தொகுதி திட்ட மேலாளர் பணி கலெக்டர் அழைப்பு
ADDED : ஏப் 28, 2025 04:16 AM
கள்ளக்குறிச்சி : மாவட்டத்தில் கிராமப்புற தொழில் முனைவோர் திட்டத்தை செயல்படுத்துவதற்கான, தொகுதி திட்ட மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க கலெக்டர் பிரசாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் விடுத்த செய்திக்குறிப்பு :
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சின்னசேலம் வட்டாரத்தில் கிராமப்புற தொழில் முனைவோர் திட்டத்தை செயல்படுத்த, தொகுதி திட்ட மேலாளர் பணியிடத்திற்கு ஒருவரை நிரப்ப வேண்டி உள்ளது.
விண்ணப்பதாரர்கள் முதுகலை, இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பிளஸ் 2 வகுப்பு வரை, கணிதத்தை ஒரு பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும். மேலாண்மை, வணிகவியல் அல்லது பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பதாரரின் வயது 22 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு மாதமும், 15 நாட்கள் கிராமங்களில் தங்கும் ஆர்வம் இருக்க வேண்டும். மாதத்திற்கு ரூ.40 ஆயிரம் தொகுப்பூதியம் மற்றும் 30 சதவீத பயணப்படி அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பங்கள் வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்தோ அல்லது கையெழுத்து பிரதியாகவோ இணை இயக்குநர், திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கிராம ஊராட்சி சேவை மைய கட்டடம், நிறைமதி கிராமம், நீலமங்கலம் அஞ்சல், கள்ளக்குறிச்சி மாவட்டம் - 606 213 என்ற முகவரிக்கு வரும் மே 3,ம் தேதி மாலை 5:00 மணிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

