
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் இந்திய ராணுவ வீரர்களின் நினைவை போற்றும் வகையிலும், முன்னாள் முதல்வர் பழனிச்சாமியின் பிறந்தநாளையொட்டியும் ரத்ததான முகாம் நடந்தது.
இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு, ரத்தம் வழங்கி முகாமை துவக்கி வைத்தார். தொடர்ந்து அ.திமு.க.,வினர் மற்றும் பொதுமக்கள் ரத்ததானம் வழங்கினர்.
முகாமில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட துணை செயலாளர் பரமாத்மா, ஒன்றிய செயலாளர்கள் செண்பகவேல், சந்திரன், சுப்புராயன், முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் சாய்ராம், வழக்கறிஞர் அணி செயலாளர் திலீப், செந்தில்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் செல்வக்குமார், ஜெயச்சந்திரன், சம்பத், வார்டு செயலாளர்கள் வெற்றிவேல், வெங்கடேசன், காமேஷ், சாய்அருண், தமிழ்செல்வன், அரசு மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.