
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம் : சின்னசேலம் வாசவி, வனிதா கிளப், லயன்ஸ் சங்கம் மற்றும் ஜெயக்குமார் - கீதாலட்சுமி அறக்கட்டளை சார்பில் வாசவி மஹாலில் ரத்த தான முகாம் நடந்தது.
வாசவி, வனிதா கிளப் சங்க செயலாளர் பரணி குமார் தலைமை தாங்கினார். லயன்ஸ் சங்க நிர்வாகிகள் சிவக்குமார், ரமேஷ், ஸ்ரீதரன் முன்னிலை வகித்தனர். முன்னாள் தலைவர் பழனிசாமி வரவேற்றார். அறக்கட்டளை நிர்வாகி சத்யநாராயணன் துவக்கி வைத்தார். மாவட்ட ரத்த வங்கி மருத்துவர் விஜயகுமார், சின்னசேலம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் குறளினியன் தலைமையிலான மருத்துவ குழுவினர்கள் ரத்தம் சேகரித்தனர்.
முகாமில் 50 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது. முன்னாள் தலைவர்கள் முகமது ரபீக், ராஜேந்திரன் முகாமினை நடத்தினர். முகாமில் வாசவி, வனிதா கிளப் உறுப்பினர்கள், லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

