/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
துாக்கில் தொங்கிய நர்ஸ் உடல் ஒப்படைப்பு
/
துாக்கில் தொங்கிய நர்ஸ் உடல் ஒப்படைப்பு
ADDED : ஏப் 24, 2025 07:25 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்த நர்ஸ் உடல், பிரேத பரிசோதனை முடிந்து குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி அடுத்த அசகளத்துாரை சேர்ந்தவர் கனகராஜ் மகள் சூரியகலா,22; கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் கிளினிக்கில் நர்சாக பணிபுரிந்தார்.
கடந்த 21ம் தேதி மாலை சிதம்பரம் பிள்ளை தெரு பகுதியில் உள்ள மரத்தில் துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.
கள்ளக்குறிச்சி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், சூரியகலா சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நேற்று முன்தினம் மதியம் 12:00 மணிக்கு கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, விசாரித்து நடவடிக்கை எடுக்கும் வரை, உடலை வாங்கமாட்டோம் என தெரிவித்தனர்.
இதனால், பிரேத பரிசோதனை செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து, டி.எஸ்.பி., தேவராஜ் மற்றும் போலீசார் பிரேத பரிசோதனை அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்பதாக உறுதியளித்தார்.
அதையடுத்து, நேற்று மாலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, சூரியகலாவின் உடல் அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.