/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுாரில் புத்தக கண்காட்சி
/
திருக்கோவிலுாரில் புத்தக கண்காட்சி
ADDED : ஆக 02, 2025 11:03 PM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார், ஆஸ்பிடல் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சார்பில், புத்தக கண்காட்சி திறப்பு விழா நடந்தது.
தமிழ்நாடு ஒழுங்குமுறை எடைபணி தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் பொன்முடி எம்.எல்.ஏ., கண்காட்சியை திறந்து வைத்தார். நகர மன்ற தலைவர் முருகன் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். ரோட்டரி சங்கத் தலைவர் கோதம்சந்த் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டார்.
மாவட்ட ஊராட்சி சேர்மன் தங்கம், தமிழ்ச் சங்கத் தலைவர் உதியன், இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் ராமசாமி, தி.மு.க., நகர செயலாளர் கோபி கிருஷ்ணன், நகர அவைத் தலைவர் குணா, கலை இலக்கிய பெருமன்ற நிர்வாகிகள் கலியபெருமாள், அருள்நாதன் தங்கராசு உட்பட பலர் பங்கேற்றனர்.
புத்தக நிறுவன மேலாளர் முருகேசன் நன்றி கூறினார்.