/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கணினி உதவியாளர் வெட்டப்பட்ட வழக்கில் 2 வழக்கறிஞர் உட்பட 5 பேர் கைது
/
கணினி உதவியாளர் வெட்டப்பட்ட வழக்கில் 2 வழக்கறிஞர் உட்பட 5 பேர் கைது
கணினி உதவியாளர் வெட்டப்பட்ட வழக்கில் 2 வழக்கறிஞர் உட்பட 5 பேர் கைது
கணினி உதவியாளர் வெட்டப்பட்ட வழக்கில் 2 வழக்கறிஞர் உட்பட 5 பேர் கைது
ADDED : ஆக 02, 2025 11:03 PM
சங்கராபுரம் : சங்கராபுரத்தில் கணினி உதவியாளர் வெட்டப்பட்ட வழக்கில் 2 வழக்கறிஞர்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் பூட்டை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முகமது கவுஸ் மகன் முகமது யாசர், 28; ஜெராக்ஸ் கடை கணினி உதவியாளர். இவரது உறவினர் அப்துல் சமத்திற்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜானகிராமன் மகன் வழக்கறிஞர் ராஜா, 29; என்பவருக்கு வீட்டு மனை தொடர்பாக முன்விரோதம் உள்ளது. இந்நிலையில், கடந்த 28ம் தேதி இரவு முகமது யாசரை மர்ம நபர்கள் இருவர் கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
மர்ம நபர்களை கைது செய்ய கோரி 30ம் தேதி, சங்கராபுரம் கடை வீதி மும்முனை சந்திப்பில் மறியல் போராட்டம் நடந்தது. அதனை தொடர்ந்து சங்கராபுரம் போலீஸ் விசாரணையை தீவிரப்படுத்தினர். முகமது யாசரை வெட்டியது, சிதம்பரம் நாகராஜ் மகன் ஸ்ரீராம், 21; சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என தெரியவந்தது. இருவரையும் போலீசார் சென்னையில் கைது செய்தனர்.
விசாரணையில் முன்விரோதம் காரணமாக அப்துல் சமதை கொலை செய்ய திட்டமிட்ட வழக்கறிஞர் ராஜா, தனது நண்பர் திருநாவலுார் வண்டிப்பாளையம் வரதராஜன் மகன் வழக்கறிஞர் கிருஷ்ணராஜ், 32; உடன் சேர்ந்து, செங்கல்பட்டு, வல்லம் பகுதி பெருமாள் மகன் விக்னேஷ், 30; என்பவரை வரவழைத்தனர்.
விக்னேஷ் மூலம் அப்துல் சமத்தை கொலை செய்ய சிதம்பரம் ஸ்ரீராம் மற்றும் 17 வயது சிறுவனை அனுப்பி வைத்தனர். கடந்த 28ம் தேதி அப்துல் சமது கிடைக்காததால், அவரது உறவினர் முகமது யாசரை வெட்டிவிட்டு இருவரும் தப்பிச் சென்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, விக்னேஷ், வழக்கறிஞர்கள் கிருஷ்ணராஜ், ராஜாவை கைது செய்தனர். சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கும், மற்ற 4 பேரும் கடலுார் மத்திய சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.