/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு பஸ்சில் பெண்ணிடம் நகை, மொபைல் போன் அபேஸ்
/
அரசு பஸ்சில் பெண்ணிடம் நகை, மொபைல் போன் அபேஸ்
ADDED : ஆக 02, 2025 11:04 PM
கச்சிராயபாளையம் : கச்சிராயபாளையம் அருகே அரசு பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம் 2 சவரன் நகை மற்றும் மொபைல் போன் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கச்சிராயபாளையம் அடுத்த பரிகம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாக்கண்ணு மனைவி மாரியம்மாள், 45; இவர் நேற்று முன்தினம் மாலை 3:30 மணியளவில் கள்ளக்குறிச்சியில் தனியார் நகை கடையில் அடகு வைத்திருந்த இரண்டு சவரன் செயினை மீட்டுக் கொண்டு ஊர் திரும்ப பஸ் ஏறினார். அக்கராயபாளையம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி பார்த்தபோது பையில் வைத்திருந்த செயின் மற்றும் மொபைல் போன் திருடு போனது தெரியவந்தது.
புகாரின் பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.