ADDED : ஜூலை 23, 2025 11:33 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பாலிடெக்னிக் கல்லுாரி அரங்கத்தில் விண்மீன் விதைகள் என்ற நுாலுக்கான திறனாய்வு கூட்டம் நடந்தது.
கல்லை கலை இலக்கிய பேரவை சார்பில் இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டன் மேயர் அலுவலகத்தில் திட்ட அலுவலராக பணியாற்றும் எழுத்தாளர் இந்திரா பங்கஜம் எழுதிய விண்மீன் விதைகள் நுாலுக்கான திறனாய்வு கூட்டம் நடந்தது. இதில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தீபிகா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினர்.
தொடர்ந்து குழந்தைகள் பாலியல் வன்கொடுமை, ஆதரவற்றோர் இல்லங்கள், பெண்ணியம் போன்ற கருத்துகளுடன் அடங்கிய நுால் குறித்து ஆசிரியர்கள் அமுதன், துரைமணிமகலை, சுதா, அருணாகுமாரி, குணசேகர், டேவிட் லாசகர், வி.சி., நிர்வாகி பொன்னிவளவன் ஆகியோர் பேசினர்.
எழுத்தாளர் இந்திரா பங்கஜம் ஏற்புரை வழங்கினார். கல்லை கலை இலக்கிய பேரவையின் நிறுவனர் தனசேகர் நன்றி கூறினார்.