/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசம்பட்டில் நுாலக வார விழா
/
அரசம்பட்டில் நுாலக வார விழா
ADDED : டிச 04, 2025 05:34 AM

சங்கராபுரம்: அரசம்பட்டு கிளை நுாலகம் சார்பில் 58 வது நுாலக வார விழா நேற்று முன்தினம் நடந்தது.
சங்கராபுரம் அரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு வாசகர் வட்ட தலைவர் மாயவன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ராமசாமி, கள்ளக்குறிச்சி மாவட்ட நுாலக ஆய்வாளர் சங்கரன் முன்னிலை வகித்தனர். நுாலகர் முருகன் வரவேற்றார். பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவில் தலைமை ஆசிரியர் ராமசாமி, ஆசிரியர் சுரேஷ் ஆகியோர் தலா ரூ.1000 செலுத்தி நுாலக புரவலர்களாக சேர்ந்தனர். நிகழ்ச்சியை செல்லம்பட்டு நுாலகர் ஜனார்த்தனன் தொகுத்து வழங்கினார். ரங்கப்பனுார் நுாலகர் சுப்பாரெட்டி நன்றி கூறினார்.

