/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பைக் மோதிய விபத்தில் சிறுவன் உயிரிழப்பு
/
பைக் மோதிய விபத்தில் சிறுவன் உயிரிழப்பு
ADDED : செப் 30, 2025 05:55 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் பைக் மோதிய விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் பாவாடைராயன் மகன் ஏழுமலை, 17; இவர், கடந்த 27ம் தேதி இரவு7:00 மணிக்கு, கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது, அவ்வழியாக சூ.பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் ரமேஷ், 28; என்பவர் அதிவேகமாக ஓட்டி வந்த பைக் சிறுவன் ஏழுமலை மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த ஏழுமலை கள்ளக் குறிச்சி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்து சேலம் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.