தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ஏரி நீரில் மூழ்கி சிறுவன் பலி

ஏரி நீரில் மூழ்கி சிறுவன் பலி

ஏரி நீரில் மூழ்கி சிறுவன் பலி


ADDED : நவ 28, 2026 10:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 28, 2026 10:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கோவிலுார்: மணலுார்பேட்டை அருகே ஏரி நீரில் மூழ்கி சிறுவன் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மணலுார்பேட்டை அடுத்த முருக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பூவரசன் மகன் நிஷாந்த், 3; இன்று (நவ.,28) காலை வீட்டின் பின்புறம் விளையாடிக் கொண்டிருந்தார். பெற்றோர்கள் சிறுவன் விளையாடிக் கொண்டிருப்பதாக நினைத்து இருந்து விட்ட நிலையில், 11:00 மணி அளவில் தேடி பார்த்த போது காணவில்லை.

அருகில் இருந்த ஏரிக்கு சென்று பார்த்ததில் நீரில் மூழ்கி மயக்க நிலையில் மீட்கப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே நிஷாந்த் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us