ADDED : ஏப் 05, 2025 04:47 AM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில், பிரம்மோற்சவ விழா துவங்கியது.
திருக்கோவிலுாரில் உலகளந்த பெருமாள் கோவிலுக்கு, நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான, இந்த கோவிலின் பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
அதிகாலை,5:00 மணிக்கு மூலவர் விஸ்வரூப தரிசனம், உற்சவ மூர்த்தியான ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கொடி மரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஜீயர் தேகளீச ராமானுஜ ஆச்சாரியார் தலைமையில், பட்டாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க 6:30 மணிக்கு கொடியேற்றப்பட்டு விழா துவங்கியது. மாலை 5:00 மணிக்கு வசந்த மண்டபத்தில் சுவாமி ஊஞ்சல் சேவை நடந்தது. இரவு 8:00 மணிக்கு அம்ச வாகனத்தில் வீதி உலா நடந்தது. நாள்தோறும் பல்வேறு வாகனங்களில், சுவாமி வீதி உலா நடக்கிறது.
வரும், 12ம் தேதி காலை 7:30 மணிக்கு தேரோட்டம் நடக்க உள்ளது. தேவஸ்தான பவர் ஏஜெண்ட் கிருஷ்ணன் மற்றும் பக்தர்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.