/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
காலை உணவுத் திட்டம் வட்டார கல்வி அலுவலர் ஆய்வு
/
காலை உணவுத் திட்டம் வட்டார கல்வி அலுவலர் ஆய்வு
ADDED : செப் 22, 2024 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம், : சங்கராபுரம் அடுத்த கள்ளிப்பட்டு தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை வட்டார கல்வி அலுவலர் ஆய்வு செய்தார்.
கல்வராயன்மலை ஒன்றியம், கள்ளிப்பட்டு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளது. இப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை கல்வராயன்மலை வட்டார கல்வி அலுவலர் மேகலாதேவி ஆய்வு செய்தார். முன்னதாக காலை உணவு தரமான முறையில் சமைக்கப்பட்டுள்ளதா என சாப்பிட்டு பார்த்தார்.
ஆய்வின்போது பள்ளி தலைமை ஆசிரியை மீனா, உதவி ஆசிரியர் ரவிச்சந்திரன் உடனிருந்தனர்.