ADDED : செப் 11, 2026 04:04 AM

அ நிறம் | அளவு
உளுந்துார்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூர்கோட்டை, கீழப்பாளையத்தை சேர்ந்தவர் அப்துல்சலீம் ஷேக், 45, நொனையவாடியை சேர்ந்த இவரது மனைவி தாஹிரோன், 40. குடும்பத்தில் உள்ள நிலத்திற்கு, கூட்டு பட்டாவில் பெயர் சேர்க்கக்கோரி, மார்ச் மாதம் எலவனாசூர்கோட்டை வி.ஏ.ஓ.,விடம் மனு அளித்துள்ளார்.
அவர், 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க, அப்துல்சலீம் ஷேக், உளுந்துார்பேட்டை பஸ் நிலையத்தில், பொதுமக்களிடம் கையில் தட்டு ஏந்தி, பிச்சை எடுத்தார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.
