/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சிவன் கோவிலில் பழுதான கேமராக்கள்; உண்டியல் திருட்டு சம்பவத்தில் சிக்கல்

ADDED : நவ 05, 2024 06:36 AM
கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் கண்காணிப்பு கேமரா பழுதால், உண்டியல் உடைத்து திருட்டுபோன சம்பவத்தில் துப்பு துலக்குவதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மதில் சுவர் ஏறிக்குதித்து உண்டியலை உடைத்து ரூ.2 லட்சத்திற்கு மேலான பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முறையான பராமரிப்பு இல்லாததால் திருட்டு சம்பவங்கள் குறித்த கேமரா பதிவுகள் ஏதும் இல்லை என தெரியவருகிறது.
இதனால் நகரின் மையப்பகுதியில் உள்ள பிரதான கோவிலில் நடந்த திருட்டு சம்பவம் குறித்து துப்பு துலக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே கோவிலின் வருமானத்தை எடுத்து செல்ல வேண்டும் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் கள்ளக்குறிச்சி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இதுபோன்று முக்கிய கோவில்களில் உள்ள கேமராக்களையாவது முறையாக பராமரித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.