/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை உளுந்துார்பேட்டை அருகே துணிகரம்
/
வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை உளுந்துார்பேட்டை அருகே துணிகரம்
வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை உளுந்துார்பேட்டை அருகே துணிகரம்
வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை உளுந்துார்பேட்டை அருகே துணிகரம்
ADDED : பிப் 22, 2024 11:36 PM
உளுந்துார்பேட்டை: வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் ரொக்கம், 2 சவரன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த பூவனுாரைச் சேர்ந்தவர் முனியன்,51; இவர் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்காக கிளியூர் சென்றிருந்தனர். நேற்று மதியம் வீட்டுக்கு சென்றபோது, பின்பக்க கதவு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த ரூ. 2 லட்சம் ரொக்கம், 2 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.இது குறித்து முனியன் கொடுத்த புகாரின் பேரில், திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து, நகை பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.