ADDED : ஜூலை 28, 2025 10:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை,; உளுந்துார்பேட்டையில் குடியிருப்புகள் அருகே தீப்பற்றி எரிந்த விழல்களை தீயணைப்பு துறையினர் அணைத்தனர்.
உளுந்துார்பேட்டை நகராட்சி, அன்னை சத்யா தெரு வீடுகளுக்கு பின்னால் பெரிய குட்டை உள்ளது. இந்தக் குட்டையில் சம்பு (விழல்) நன்கு வளர்ந்துள்ளது. அவற்றில் ஏராளமான பகுதி காய்ந்து சறுகாக மாறியிருந்தது. இந்நிலையில் நேற்று மர்ம நபர்கள் விழல்களுக்கு தீ வைத்தனர். தீ வேகமாக பரவியதால் அருகில் உள்ள வீடுகளில் வசிப்போர் அச்சம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த உளுந்துார்பேட்டை தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.

