/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : 10 பேர் காயம்
/
பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : 10 பேர் காயம்
பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : 10 பேர் காயம்
பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : 10 பேர் காயம்
ADDED : டிச 22, 2025 05:34 AM

உளுந்துார்பேட்டை: -: உளுந்துார்பேட்டை அருகே தனியார் சொகுசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
திருச்சி மாவட்டம், லால்குடியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ஓம்சக்தி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக தனியார் சொகுசு பஸ்சில் மேல்மருவத்துாருக்கு சென்றனர். நேற்று முன்தினம் இரவு மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவிலில் சுவாமி தரிசனம் முடிந்த பிறகு, மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டனர்.
நேற்று காலை 8:00 மணிக்கு, உளுந்துார்பேட்டை அடுத்த செங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பஸ்சில் பயணித்த 10க்கும் மேற்பட்டோர் லேசான காயமடைந்தனர். தொடர்ந்து, அனைவரும் மாற்று பஸ் மூலம் லால்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கிரேன் மூலம் விபத்துக்குள்ளான பஸ் மீட்கப்பட்டது. விபத்து குறித்து உளுந்துார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

