ADDED : டிச 22, 2025 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை: டிச. 22-: உளுந்துார்பேட்டை அருகே தேஜஸ் ரயில் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தார்.
உளுந்துார்பேட்டை தாலுகா, பூமாம்பாக்கத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி சத்யா, 37; இவர், நேற்று காலை 8:00 மணிக்கு, பூமாம்பாக்கம் ரயில்வே சுரங்கப்பாதை அருகே இரண்டு மாடுகளை மேய்ச்சலுக்காக விளை நிலத்திற்கு ஓட்டி சென்றார். காலை 8:15 மணிக்கு, ரயில் பாதையை கடக்க முயற்சித்த சத்யா மீது சென்னையில் இருந்து வந்த தேஜஸ் எக்பிரஸ் ரயில் மோதியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சத்யா உயிரிழந்தார். தகவலறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சத்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரிக்கின்றனர்.

