/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு அழைப்பு
/
நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு அழைப்பு
ADDED : ஏப் 04, 2025 04:48 AM
கள்ளக்குறிச்சி: விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சியில் விருப்பம் உள்ளவர்கள் பங்கேற்கலாம் என, கள்ளக்குறிச்சி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதில், தங்கத்தின் தரம் அறிதல், பழைய நகைகளை தரம் பார்த்து கொள்முதல் செய்தல், நகைக்கடன் வட்டி கணக்கிடுதல், கே.டி.எம்., ஹால்மார்க் பற்றிய விளக்கம் தொடர்பான பயிற்சி, அதற்கான உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. இதில்,10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் சேரலாம். சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில், 17 நாட்களில் மொத்தம், 100 மணிநேரத்திற்கு வகுப்புகள் நடக்கும்.
இதற்கான விண்ணப்பத்தை வரும்,13ம் தேதி வரை கட்டணம் செலுத்தி பயிற்சி நிலையத்தில் பெறலாம். வரும் 15ம் தேதி வகுப்புகள் துவங்க உள்ளன.
கூடுதல் விபரங்களை விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையம், எண் நெ.2/1006, எல்லீஸ் சத்திரம் சாலை, திருச்சி நெடுஞ்சாலை, வழுதரெட்டி, விழுப்புரம் - 605 401 எனும் முகவரியில் நேரிலும், 04146 - 259467, 94425 63330 என்ற தொடர்பு எண்ணிலும் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.