/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி தொகுதியை கேட்டு காங்., - வி.சி., அடம்
/
கள்ளக்குறிச்சி தொகுதியை கேட்டு காங்., - வி.சி., அடம்
கள்ளக்குறிச்சி தொகுதியை கேட்டு காங்., - வி.சி., அடம்
கள்ளக்குறிச்சி தொகுதியை கேட்டு காங்., - வி.சி., அடம்
ADDED : பிப் 13, 2024 06:10 AM
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என காங்., மற்றும் வி.சி., கட்சி நிர்வாகிகள் தி.மு.க.,வை வலியுறுத்தி வருகின்றனர்.
லோக்சபா தேர்தல் நெருங்குவதால் கூட்டணி கட்சிகளுக்குள் தொகுதி பங்கீடு குறித்து தீவிர பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் கள்ளக்குறிச்சி தொகுதி தங்களுக்கே வேண்டுமென காங்., மற்றும் வி.சி., கட்சித் தலைவர்கள் தி.மு.க., தலைமையை வலியுறுத்தி கேட்கின்றனர்.
கள்ளக்குறிச்சி தொகுதியைப் பொறுத்தவரை கடந்த தேர்தலில் 7 லட்சத்து 21 ஆயிரத்து 713 ஓட்டுகள் பெற்று கவுதம சிகாமணி எம்.பி., யாக தேர்வு செய்யப்பட்டார். அ.தி.மு.க., கூட்டணி ஆதரவுடன் போட்டியிட்ட தே.மு.தி.க., வேட்பாளர் சுதீஷை விட 3 லட்சத்து 99 ஆயிரத்து 919 ஓட்டுகள் அதிகம் பெற்றார்.
இதனால் இந்த தொகுதியை வரும் தேர்தலிலும் தன் வசம் வைத்துக் கொள்ள வேண்டும் என தி.மு.க., தலைமை விரும்புகிறது.
காங்., கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவராக உள்ள ஜெய்கணேஷ் அக்கட்சியின் முக்கிய தலைவரான ராகுல் அபிமானத்திற்கு உரியவராக உள்ளார். இவர் கள்ளக்குறிச்சி தொகுதியில் காங்., சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டு காத்திருக்கிறார்.
கடந்த சட்டசபை தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதி தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்., கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இக்கட்சி வேட்பாளராக மணிரத்தினம் களமிறங்கினார்.
துவக்கத்தில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவர் கடைசி நேர பிரசார தொய்வு, போதிய செலவு செய்யாதது, கூட்டணி கட்சியினரை முறையாக ஒருங்கிணைக்காதது உள்ளிட்ட காரணங்களால் தோல்வியைத் தழுவினார்.
இதனால்,அ.தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமாரின் வெற்றி எளிதானது.இதன் காரணமாகஇத்தொகுதியை மீண்டும் காங்கிரசுக்கு விட்டுத்தர தி.மு.க., வுக்கு விருப்பம் இல்லை.அதே போல் வி.சி., கட்சிக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொண்டர் பலம் அதிகம்.
இக்கட்சியின் பொதுச் செயலாளரான சிந்தனைச்செல்வன் இத்தொகுதியை சேர்ந்தவர். இதனால் கள்ளக்குறிச்சி தொகுதியை கேட்டுப் பெற்று இவரை இங்கு களம் இறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும், கடந்த லோக்சபா தேர்தல் வெற்றி மற்றும் ஆட்சிக்கு வந்த பிறகு செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் வெற்றிக்கு சாதகமாக இருக்கும் என தி.மு.க., தலைமை கருதுவதால் கள்ளக்குறிச்சியை கூட்டணிக்கு விட்டுக் கொடுக்காமல் தங்கள் கட்சியின் வேட்பாளரையே இத்தொகுதியில் களம் இறக்க விரும்புவதாக அக்கட்சியினர் கூறி வருகின்றனர்.