/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பழுதான கண்காணிப்பு கேமராக்கள் சீரமைக்கப்படுமா? எஸ்.பி., நடவடிக்கை எடுக்க கோரிக்கை
/
பழுதான கண்காணிப்பு கேமராக்கள் சீரமைக்கப்படுமா? எஸ்.பி., நடவடிக்கை எடுக்க கோரிக்கை
பழுதான கண்காணிப்பு கேமராக்கள் சீரமைக்கப்படுமா? எஸ்.பி., நடவடிக்கை எடுக்க கோரிக்கை
பழுதான கண்காணிப்பு கேமராக்கள் சீரமைக்கப்படுமா? எஸ்.பி., நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ADDED : மார் 05, 2024 07:33 AM
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி நகர பகுதியில் போலீசார் அமைத்துள்ள கண்காணிப்பு கேமராக்கள் பெரும்பாலன இடங்களில் பழுதாகிப்போனது. இதனை சீரமைக்க எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி நகரில், குற்ற நடவடிக்கையை கண்காணித்து தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் காவல் துறை சார்பில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
அதன்படி, நகரின் நான்கு முக்கிய சாலைகள், நான்குமுனை சந்திப்பு, பஸ் நிலையம், மார்க்கெட் பகுதி, மணிக்கூண்டு, அரசு மருத்துவமனை, நகரின் நுழைவு வாயில்கள், கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், வங்கிகள் என 40க்கும் மேற்பட்ட இடங்களில் கேமராக்கள் உள்ளன.
திருட்டு, வழிப்பறி, வாகன விபத்து, போக்குவரத்து விதிமீறல்கள் போன்ற குற்ற நடவடிக்கை ஏதேனும் நிகழ்ந்தால் போலீசார் துப்புத்துலக்க வசதியாக அமைக்கப்பட்டுள்ள இந்த கேமராக்கள் சூரிய ஒளி மற்றும் மின்சாரம் மூலம் இயங்க கூடியதாகும். இதற்கான கண்காணிப்பு அறை கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இதில், கலெக்டர், டி.எஸ்.பி., அலுவலகங்கள் உள்ள கச்சிராயபாளையம் சாலையில் உள்ள அனைத்து கேமராக்களும் பழுதடைந்தது. இதேபோல் நகரின் பெரும்பாலான பகுதிகளிலும் பொருத்தப்பட்ட கேமராக்கள் பழுதாகி பல மாதங்களாகியும், அதனை சீரமைக்க இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் கேமராக்களின் பதிவு 'டிவி'யில் டிஸ்ப்ளே ஆகாமல் உள்ளது.
இதன்காரணமாக குற்ற நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை உடனடியாக கண்டறிந்து பிடிக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.
எனவே, குற்ற தடுப்பு நடவடிக்கையில் முக்கிய பங்காக விளங்கக்கூடிய கண்காணிப்பு கேமராக்களை பழுது நீக்கி மீண்டும் செயல்பட எஸ்.பி., சமய்சிங் மீனா நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

