/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வேலை வாய்ப்பு குறித்து வழிகாட்டி நிகழ்ச்சி
/
வேலை வாய்ப்பு குறித்து வழிகாட்டி நிகழ்ச்சி
ADDED : மார் 13, 2024 02:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி, : இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் வேலை வாய்ப்பு குறித்த வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஜான்விக்டர் முன்னிலை வகித்தார்.
உதவி பேராசிரியர் சக்திவேல் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர், கள்ளக்குறிச்சி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் முரளிதரன், இளநிலை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் செங்கதிர் ஆகியோர் அரசு வேலை வாய்ப்புகள், வேலை வாய்ப்பு அலுவலகத்தால் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்புகள் குறித்து விளக்கினர். மேலும், மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தனர்.
உதவி பேராசிரியர் கோமதி நன்றி கூறினார்.

