/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
டாஸ்மாக்கில் மோதல் 10 பேர் மீது வழக்கு
/
டாஸ்மாக்கில் மோதல் 10 பேர் மீது வழக்கு
ADDED : ஏப் 20, 2025 11:34 AM
திருக்கோவிலுார்: திருப்பாலபந்தல் அருகே டாஸ்மாக்கில் இரு கிராமத்தை சேர்ந்தவர்கள், மோதிக்கொண்ட விவகாரத்தில், 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பாலபந்தலை அடுத்த எடையூர் கிராமத்தை சேர்ந்த சிலர், மாடாம்பூண்டி கூட்டு சாலையில் உள்ள டாஸ்மாக்கில், நேற்று முன்தினம் மது அருந்த சென்றனர். அப்போது அங்கு ஏற்கனவே மரூரை சேர்ந்த சிலர் மது அருந்தி கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, திடீரென மோதல் உண்டானது. இதில் ஒருவருக்கொருவர் கற்களை வீசி கடுமையாக தாக்கி கொண்டனர்.
இது தகவல் அறிந்த திருப்பாலபந்தல் போலீசார், அங்கு விரைந்த சென்று விசாரித்தனர். இந்த விவகாரத்தில், எடையூர் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி மகன் கார்த்திகேயன், 29; நடராஜன் மகன் சதீஷ்குமார், 30; உள்ளிட்ட, 4 பேர்; மற்றும் மரூர் கிராமத்தைச் சேர்ந்த பட்டுசாமி மகன் நாகராஜ், 46; கோபால் மகன் பரதன், 36; பாலசாமி மகன் சசி, 28; உள்ளிட்ட 6 பேர்; என, மொத்தம் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

