/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முன் விரோத தகராறு 16 பேர் மீது வழக்கு
/
முன் விரோத தகராறு 16 பேர் மீது வழக்கு
ADDED : டிச 28, 2025 06:28 AM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே சொத்து தொடர்பான முன்விரோத தகராறில் இருதரப்பையும் சேர்ந்த 16 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
திருக்கோவிலுார் அடுத்த நெடுமுடையான் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை, 55; இவரது தம்பி ஆனந்தன், 36; இருவருக்கும் இடையே நிலம் பாகம் பிரிப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது.
நேற்று காலை தென்னை மரத்திலிருந்து விழுந்த தேங்காயை ஆனந்தன் மனைவி சகுந்தலா எடுத்துள்ளார். இதனை தட்டிக் கேட்ட ஏழுமலை, மனைவி சரளா, ஆதரவாளர் மணிமேகலை ஆகியோரை, ஆனந்தன், சகுந்தலா ஆதரவாளர்கள் அரவிந்தசாமி, செல்வராஜ் உட்பட 10 பேர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து புகாரின் பேரில், இரு தரப்பிலும் 16 பேர் மீது திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

