/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அண்ணனை தாக்கிய தம்பி உட்பட 2 பேர் மீது வழக்கு
/
அண்ணனை தாக்கிய தம்பி உட்பட 2 பேர் மீது வழக்கு
ADDED : அக் 25, 2025 07:06 AM
ரிஷிவந்தியம்: வாணாபுரம் அருகே முன்விரோத தகராறில் அண்ணனை கத்தியால் தாக்கிய தம்பி உட்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
வாணாபுரம் அடுத்த அரும்பராம்பட்டைச் சேர்ந்தவர் ஏழுமலை, 58; இவரது தம்பி சுப்ரமணி, 50; இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது.
ஏழுமலை தொழுவந்தாங்கலில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் பைக்கில் சென்றார்.
அத்தியூர் மயானம் அருகே சென்ற போது, சுப்ரமணி மற்றும் பாப்பன்பாடியைச் சேர்ந்த ராஜபூபதி, 44; ஆகிய இருவரும் சேர்ந்து, ஏழுமலையை வழிமறித்து கத்தியால் தாக்கினர். படுகாயமடைந்த ஏழுமலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
புகாரின் பேரில் சுப்ரமணி ராஜபூபதி ஆகிய இருவர் மீதும் பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

